மெலனியா டிரம்பின் "மகிழ்ச்சி வகுப்பு" வருகை குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்.

அமெரிக்க அதிபரின் மனைவியான மெலானியா இந்த மகிழ்ச்சி வகுப்பில் பங்கேற்பது எங்களுக்கு சிறந்த நாளாகும். பல நூற்றாண்டுகளாக இந்தியா உலகிற்கு ஆன்மீகத்தினை கற்றுத் தந்திருக்கிறது. மேலும் எங்கள் பள்ளியிலிருந்து மகிழ்ச்சியின் செய்தியினை அவர் நிச்சயம் பெறுவார். என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட் செய்திருந்தார்.


அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேற்று இரவு டெல்லியில் தரையிறங்கினர். அதற்கு முன்னதாக அகமதாபாத்திலிருக்கும் உலகின் பெரிய மைதானத்தில் உரை நிகழ்த்தியிருந்தார் என்பதும், அங்கிருந்து ஆக்ராவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.