வகுப்புவாத சித்தாந்தத்திற்கு நாட்டில் இடமில்லை. டெல்லி கலவரம் குறித்து சோனியா காந்தி

New Delhi: 


வடகிழக்கு டெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள்ளான மற்றொரு கலவரத்தில் ஒரு தலைமைக் காவலர் உட்பட ஐந்து பேர் இறந்திருக்கின்றனர்.


மத ஒற்றுமையை நிலைநாட்டவும் மதத்தின் அடிப்படையில் தேசத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஆர்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். மேலும், கடைகள் மற்றும் வாகனங்களையும் அவர்கள் எரித்தனர். இதன் காரணமாகத் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்கவும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.


காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் சோனியா காந்தி, கலவரத்தில் இறந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது மரணம் வேதனையளிப்பதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது. 


மகாத்மா காந்தியின் தேசத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று திருமதி சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும், வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தத்திற்கு நாட்டில் இடமில்லை என்று காந்தி கூறியிருந்ததையும் சோனியா சுட்டிக்காட்டினார். 



 


இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வன்முறையைத் தொந்தரவு என்று குறிப்பிட்டிருக்கிறார். 
"டெல்லியில் இன்று வன்முறை கவலைக்குரியது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் ஆனால் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. டெல்லி குடிமக்கள் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களைப் பொருட்படுத்தாமல் கட்டுப்பாடு இரக்கம் மற்றும் புரிதல் ஆகியவற்றைக் காட்ட நான் கேட்டுக்கொள்கிறேன். "என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.